Thursday, 4 May 2017

விஷாகா ஹரி-சங்கீத உபன்யாசம்-04

                                       
                                            Super Power Bharath





                                        லால்குடி ஜெயராமன் சரித்திரம்





விஷாகா ஹரி-சங்கீத உபன்யாசம்-03

                                     
                                               புரந்தரதாசர் சரித்திரம்




                                                  பிரகலாதா சரித்திரம்



விஷாகா ஹரி-சங்கீத உபன்யாசம்-02


                                                சுதாமா சரித்திரம்




                                             ராம நாம வைபவம்



விஷாகா ஹரி-சங்கீத உபன்யாசம்-01




                                                  கண்ணனே என் கண்


கிருஷ்ண லீலை

Monday, 1 May 2017

இருப்பதே கொடுக்கப்படுகிறது


முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.

ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.(அவ்வளவு குரோதம் !)

மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.

மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் :

"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்"
(“EACH GIVES WHAT HE HAS")

எவ்வளவு நிதர்சனமான உண்மை....! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும்.

உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது ?
அன்பா - பகையா ?
அமைதியா - வன்முறையா ?
வாழ்வா - சாவா ?
உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா ?
இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன ?

"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்"

பயமயம்

நகைச்சுவை

இரண்டு சின்ன பசங்க, ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.

ஒரு அமைதியான இடத்துக்கு போய்
இரண்டு பேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க.

பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு
ஒருத்தன் சொன்னான்.

சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு....
கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.
அப்படி குதிக்கும் போது ரெண்டு ஆரஞ்சுப்பழம் மட்டும் கீழ விழுந்துடுச்சி. கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அதை அவங்க கண்டுக்கல.

கொஞ்ச நேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான்.

அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.

"உனக்கொன்னு, எனக்கொன்னு"

"உனக்கொன்னு, எனக்கொன்னு"

 ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"

இதை கேட்ட அவனுக்கு  போதை மொத்தமும் தெளிஞ்சிடுச்சி..

அவன் பயந்து போய் அங்கிருந்து விழுந்தடிச்சி ஓடினான்.

அவன் போற வழியில ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர் தவம் பண்ணிக்கிட்டு இருந்தார்.  இவன் உடனே  அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான்.

"சாமி! தயவு செய்து என் கூட வாங்க.
கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்."

சாமியார்க்கு ஒன்னும் புரியல. ஆனாலும் அவன் ரொம்ப கெஞ்சி கூப்பிட்டதால
அவன் கூட போனாரு.

அவங்க கேட் கிட்ட வந்து கேட்ட திறக்கும் முன்...

இப்பொழுதும் சுடுகாட்டுல இருந்து மறுபடியும் அதே சத்தம் வந்துச்சு..

"உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"

திடீர்ன்னு சத்தம் நின்னுடுச்சி. ஆனா, ஒரு சத்தம் தெளிவா கேட்டது.

"ஆமா! கேட்ல இருக்குற இரண்டு யாருக்கு?"

"எனக்கு."

"இல்ல..இல்ல. எனக்குத்தான்."

"சரி நீயே அதை உரிச்சு தின்னு"

அவ்வளவுதான்..

"நாங்க இன்னும்
சாகல. நாங்க இன்னும் சாகலை"ன்னு அலறிக்கிட்டே,
சாமியாரும், குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க...

பணம்



● நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்.
● நான் உன்னை விட்டுப் பிரிந்தால் நீ ஏழை.
● என்னை மற்றவரிடம் உதவிக்காக கொடுத்தால் நீ கொடையாளி.
● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி.
● என்னை கணக்கில்லாமல் செலவு செய்தால் நீ ஊதாரி.
● என்னை தேவைக்கு செலவளிக்காமல் சேமித்து வைத்தால் நீ கஞ்சன்.
● என்மேல் அதிகப் பற்றுடன் வாழ்ந்தால் நீ பேராசைக்காரன்.
● என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ சந்நியாசி.
● உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்.
● இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன்.
● உன் நடத்தையை விட, நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

இப்படிக்கு
பணம்