ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான். நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை. ஒரு நாள் அந்த வாலிபன், தன்னுடைய அப்பாவிடம் வந்து தன் நிலையைக்கூறினான். “என்னை யாருக்கும் பிடிக்க வில்லை. யாரும் என்னிடம் பழகுவதில்லை. என்னிடம் உள்ள இந்த கோபத்தினால் வரும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசாமல் கோபத்தைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்” என்றான். அவன் தந்தை அவனிடம் ஒரு பாத்திரம் நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார். ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு, வீட்டுக்குப் பின்னால் உள்ள மரத்தில் ஓர் ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும்படி கூறினார். முதல் நாள் அந்த மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே! நாளடைவில் ஆணியையும்,சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை. அப்பாவிடம் போய் விவரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஓர் ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் அந்த மரத்தைப் பார்க்கப் போனார்கள். அப்பா மரத்தில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம் என்று அவனுக்கு எடுத்துக் கூறினார். மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி அனைவரும் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான். நாமும் கூட நமக்கு கோபம் வரும் போது பிறரை தவறான வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறோம். மேலும் கோபப்பட்டதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டாலும் நாம் கூறிய வார்த்தைகள் அவர்கள் உள்ளத்தில் வடுவாகவே காணப்படும். ஆகவே நாம் பேசும் போது நாவை அடக்கி, என்ன பேச வேண்டும் என்பதை யோசித்து பேச வேண்டும். இறைவன் நம்மை அவர் சாயலில்தான் படைத்துள்ளார். எனவே அனைவரிடமும் அன்புடன் பேசி பழகினால்தான் இறைவன் நம் மீதும் அன்பாக இருப்பார். நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.
Saturday, 27 January 2018
Monday, 22 January 2018
கண் மொழி
1). *கண்கள்* வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.
2). *கண்கள்* இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.
3). *கண்கள்* மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.
4). *கண்கள்* கீழே பார்த்தால் அடிபணிகிறது.
5). *கண்கள்* விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,
ஆசைப்படுகிறது.
6). *கண்கள்* சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
7). *கண்கள்* கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.
8). *கண்கள்* வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.
9). *கண்கள்* வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
10). *கண்கள்* படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.
11). *கண்கள்* மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.
12). *கண்கள்* எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
13). *கண்கள்* கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.
14). *கண்கள்* கண்ணுக்குள் பார்த்தால் காதல்.
15). *கண்கள்* இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது
16). *கண்கள்* இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.
17). *கண்கள்* வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.
18). *கண்கள்* வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.
19). *கண்கள்* உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் எதையோ தேடுகிறது.
20). *கண்கள்* ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.
21). *கண்கள்* மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.
22). *கண்களை* கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.
23). *கண்களை* கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
24). *கண்கள்* மூடித்திறந்தால் வெறுக்கிறது.
25). *கண்* புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.
26). *கண்* புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
27). *கண்களும்* புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.
28). ஒரு *கண்* திறந்திருந்தால் சேட்டை.
29). இரண்டு *கண்களும்* மூடி இருந்தால் தூக்கம்.
30). *கண்கள்* திறக்கவில்லையென்றால் மரணம்
Sunday, 21 January 2018
இலவசம் வேண்டாமே
திருடன் ஒருவன் ஒரு வீட்டுக்கு திருடச் சென்றான். அங்கு காவலுக்கு ஒரு நாய் இருந்தது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்தது...
.
திருடனுக்கு, திருடச் செல்லலாமா... வேண்டாமா? உள்ளே போனவுடன் நாய் குரைத்தால் என்ன செய்வது.. இப்போதே குரைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்..
.
யோசித்தவன் முடிவாக ஒரு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான். அதை கண்டவுடன் நாய் திருடனை பார்த்து சத்தம்போட்டு குரைத்து, கடிக்க பாய்ந்தது..
.
அப்போது திருடன் நாயிடம், ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ, இலவசமாக பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னை கடிக்க வருகிறாய் என்று கேட்டான்..
.
அதற்கு அந்த நாய் சொல்லியது, நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரிந்தவராக இருக்குமோ என்று நினைத்திருந்தேன்..
.
எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை கொடுத்தாயோ, அப்போதே உறுதியாகி விட்டது நீ திருடன் தான் என்று......!!!
...........யோசிக்க வேண்டிய விஷயம் தானே......!!! மனிதம் தாண்டிய அறிவு.
வாழ்க்கையில் இலவசமே வேண்டாம்.
Friday, 19 January 2018
பொங்கல்
இன்பமோ துன்பமோ பொங்கு.
குக்கருக்குள் சாதமாய்
அமுங்கி அவிந்து
குழைந்தே கிடந்து
எலியாய் முயலாய்
பதுங்கிடும் பாம்பாய்
அஞ்சி நடுங்கி அடங்கி
முடங்கியே வாழாது
புலியாய் சிங்கமாய்ப்
புயலாய் எரிமலையாய்
சிலிர்ப்பாய் எழுவாய்
கர்ஜிப்பாய் கனல்வாய்
வெடிப்பாய் விரைவாய்
வெகுள்வாய் வெள்ளமெனப்
Tuesday, 16 January 2018
Sunday, 14 January 2018
நன்றி நாய்களிடம்
Saturday, 13 January 2018
Thursday, 11 January 2018
சங்கே முழங்கு
இறைவன் அவர்களின் நம்பிக்கையைக் கண்டு அவருக்கு நலமளித்தார்...
அந்த கிராமத்திற்கு முனிவர் ஒருவர் வந்திருந்தார். வந்தவர் ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். ஆனால், அந்த ஊரில் இருந்த யாருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை, ஒருசிலரோ அவரைக் கேலிசெய்தார்கள். இதனால் அவர் கோபத்தில் அந்த ஊருக்கு சாபமிட்டார், ”இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது. வானம் பொய்த்துவிடும்”. இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.
மேலிருந்து இதைக் கவனித்த இறைவன் - பரந்தாமன் - தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் (இறைவன் – பரந்தாமன் - சங்கு ஊதினால்தான் மழை வரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்துவிட்டான்.
இது நடந்த சில நாட்கள் கழித்து அந்த ஊரில் அதிசயம் ஒன்று நடந்தது. ஆம், அவ்வூரில் இருந்த ஓர் உழவன் மட்டும் கலப்பையைத் தூக்கிக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்துகொண்டு இருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர். மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு. அவனிடம் கேட்டே விட்டனர், “நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா?” என்று. அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம், “50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும். அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்” என்றான்.
இது வானத்தில் இருந்த இறைவனுக்குக் கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார். “50 வருசம் சங்கு ஊதாமல் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று நமக்கு மறந்து போயிருமே” என்று நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். மறுகணம் இடி இடித்தது. மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த உழவின் நம்பிக்கை ஜெயித்து விட்டது
எதையும் நம்பிக்கையோடு செய்தால், அது நிச்சயம் நடக்கும் என்பதை இந்தக் கதையின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.
எனவே, இறைவன் வழியில் நடக்கும் நாம் அவர்மீது ஆழமான, அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு வாழ்வோம், நம்பிக்கைத் தளர்வோடு இருக்கின்றவர்களுக்காகவும் நாம் நம்பிக்கையோடு ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.