Tuesday, 31 October 2017

விதுர நீதி

விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்:

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.

ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.

இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்...

Monday, 16 October 2017

சாதனையாளர்கள் வாய்மொழி

#  முகேஷ் அம்பானி (Mukesh Ambani)

உங்கள் பார்வையை விசாலமாக திறந்து வையுங்கள்.
பயபடாதீர்கள், வலுவாக இருங்கள்.
கனவு காணுங்கள்.
மன உறுதியுடைய குழுக்களை உருவாக்குங்கள்.
ரிஸ்க் எடுப்பதிலிருந்து மிகச் சிறந்த பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
வெற்றியின் மீது எப்போது ஆவல் கொண்டிருங்கள்.
உங்கள் உறுதியான உள்ளுணர்வுகளை நம்புங்கள்.
உங்களை பற்றி நீங்கள் செய்த காரியங்கள்தான் பேசும்.
எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்திருக்காதீர்கள்.

#  ஜாக் மா (Jack Ma)
1. புறக்கணிப்பை பயன்படுத்துங்கள்.
2. உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive).
3. குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள்.
4. உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
5.  உங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள்.
6.  ஏதேனும் ஒரு காரியங்களில் கவனத்தை குவியுங்கள்.
7.  உங்கள் கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள்.
8.  முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள்.
9.  நிறுவனத்தின்  மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல்,  கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
10. உங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.

#  லாரி பேஜ் (Larry Page)
பெரிய இலக்குகளை நிர்ணயுங்கள்
தோல்விகளுக்கு பயப்படாதீர்கள்.
நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களை ஒழுங்குபடுத்தி அமையுங்கள். உங்கள் நிறுவனத்தில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கலாம் அவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி கட்டமையுங்கள்.
உங்கள் கனவுகளை பின்பற்றுங்கள் (Follow Your Dreams).
சிறந்த ஐடியாக்களை வைத்திருங்கள். பணம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உங்களுக்கு சிறந்த ஐடியாக்கள் இல்லாத துறையில் தொழிலை தொடங்காதீர்கள். 
உங்கள் திட்டத்தை நீண்ட காலத்திற்காக  தீட்டுங்கள்.
சவால்களை ஏற்றுகொள்ளுங்கள்.
ஒரே நிலையில் தங்கிவிடாதிர்கள். சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.
மாற்றங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
பெரிய பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள்தான் தொழிலுக்கு மூல காரணம். கூகுளும் தகவல் கிடைப்பதில் நமக்கு ஏற்பட்ட பிரச்சனையின் தீர்வுதான்.

#  ஜெப் பெசாஸ் (Jeff Bezos)
நீங்கள் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் எடுத்த முடிவினால் தோல்வி ஏற்பட்டாலும் வருத்தப்படாதீர்கள்.
நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள் (Take a Risk).
உங்களுக்கு தீவிர காதல் இருக்கும் (Passion) விசயத்தையே பின்பற்றுங்கள்.
வாடிக்கையாளர்கள் மீது  கவனம் செலுத்துங்கள்.
நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள்.
மார்க்கெட்டிங்கை விட வாடிக்கையாளர்களின் சேவைகளுக்காக அதிகம் செலவழியுங்கள்.
உங்கள் நிறுவனத்தில் கலாசாரத்தை உருவாக்குங்கள்.
சில சமயங்களில் மதிப்புமிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்பளிக்கும்.
உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள் மூளையை அல்ல.

# Robert Kiyosaki
உங்களை சுற்றி உங்களை போல் எண்ணம் (Like minded) கொண்ட ஆதரவான மனிதர்களை வைத்திருங்கள்.
கடினமான தருணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை (Opportunities) உருவாக்கும்.
நீங்கள் சேமிப்பதை விட  முதலீடு செய்யுங்கள்.
எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், எப்படி என்னால் இதை வாங்க முடியும் என்று கேளுங்கள்.
உங்கள் வாழக்கையை மிக எளிமையாக்குங்கள்

# எலன் மஷ்க் (Elon Musk)
நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான  மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் செய்வதை விரும்புங்கள்.
தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். நீங்கள் தோல்வியடைய விருப்பமில்லையென்றால், புதுமையாக  எதையும் படைக்க இயலாது.
நீங்கள் இளைஞராக இருக்கும்போதே துணிந்து செயல்படகூடிய சரியான தருணமாகும்.
நீங்கள் செய்வதை விட்டுவிடாதீர்கள்.
வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள்.
உங்கள் முக்கிய பணியின் மீது கவனம் செலுத்துங்கள்.
உங்களுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
இந்த உலகத்தில் உள்ளதை தாண்டி யோசியுங்கள்.
ஒவ்வொரு விழித்திருக்கும் மணி நேரமும் கடுமையாக உழையுங்கள்.

#  Alan Sugar

பின்னடைவுகளுக்கு தயாராக இருங்கள். உங்கள் திட்டத்தில் நம்பிக்கை, நோக்கத்தில் உறுதி, தீவிர உணர்ச்சி கொண்டிருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
உங்களுக்கு அனுபவம் இருக்கும் விசயத்திலேயே தொழிலைத் தொடங்குங்கள். இந்த அனுபவம் ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்ததின் மூலம் பெற்றதாக இருக்கலாம் அல்லது உங்களது பொழுதுபோக்கின் மூலம் கிடைத்த அனுபவமாக இருக்கலாம்.
உங்கள் தொழில் சார்ந்த வல்லுனர்களிடம் அறிவுரை கேளுங்கள். நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கேட்காதீர்கள்- அவர்கள் உங்களுக்கு பிடிக்கும் மாதிரியான அறிவுரை மட்டுமே கூறுவார்கள்.
ஒரே நேரத்தில் ஒவ்வொரு அடியாக வையுங்கள். நீங்கள் நடக்க முடியும் முன் ஓட முயற்சிக்க வேண்டாம். சிறியதாக ஆரம்பியுங்கள். ஒன்று கிடைத்தபின் அடுத்த அடியை வைத்து வளருங்கள்.
உங்கள் தொழிலுக்கான சந்தையை முழுவதும் ஆராய்ந்து பாருங்கள். சந்தையில் உங்கள் தொழிலை போன்ற மற்ற தொழில்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் தொழிலை ஒத்த தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்குமென்றால், வாடிக்கையாளர்கள் உங்களிடம் ஏன் வாங்க வேண்டும்? என்று ஆராயுங்கள்.
முறையான தொழில் திட்டத்தை உருவாக்குங்கள். இந்த தொழில் திட்டம் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை காட்டும் மற்றும் சந்தையை புரிந்துகொள்ளவதற்கு உதவும். மற்றவர்கள் செயலை தீவிரமாக செய்ய உதவும்.
உங்களுக்கென்று தனித்துவமான பாணியை கண்டுபிடியுங்கள். அது புதியதாக இருக்கவேண்டும் என்பதில்லை. பல விஷயங்கள் முன்பே செய்தவைதான். செய்யும் விதத்தை சிறந்ததாக செய்யுங்கள்.
வங்கிகள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் உங்கள் பணத்தை போடுங்கள். தொழிலில் துணிகர முயற்சி எடுக்க தயாராக இருப்பதை அவர்களுக்கு நிரூபியுங்கள். நீங்கள் தொழிலில் எவ்வளவு தீவிர ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தினால், அவர்களுக்கு தயக்கம் குறைந்து பணத்தை கொடுப்பார்கள்.
யதார்த்தமாக இருங்கள். உங்களுக்கு தோன்றிய ஐடியா சிறந்தது என்று நினைக்கலாம். ஆனால் அந்த ஐடியா யாருக்காவது தேவைப்படுமா, செலவு குறைந்ததா, நடைமுறையில் செயபடுத்த முடியுமா? என்பதை யோசியுங்கள்.
பல்வேறு ஆதாரங்களிலிருந்து அறிவுரைகளை பெறுங்கள்.

#  மார்க் கியூபன் (Mark Cuban)
உங்கள் திறமைகளை தெரிந்து வைத்துகொள்ளுங்கள். அந்த திறமைகளை உயர்த்துவதற்கு கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் தொடங்கவிருக்கும் தொழில் மீது உங்களுக்கு தீவிர காதல் இல்லையெற்றாலும், அது உங்கள் மனதை ஆட்டிபடைக்கவில்லையெற்றாலும் அந்த தொழிலை தொடங்காதீர்கள். நாம் செய்ய இருக்கும் விசயத்தின் மீது காதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.
உங்கள்  தொழில் எதிர்மறையாக செல்லும்பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் எண்ணம் இருந்தால் உங்கள்  தொழிலின் மீது உங்களுக்கு காதல் இல்லை அர்த்தம்.
உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்களையே வேலைக்கு தேர்ந்தெடுங்கள்.
உங்கள் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டபோகிறது, எப்படி விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதை தெரிந்து வைத்துகொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உள்ளது, உங்கள் ஊழியர்களுக்கு  நிறுவனத்தில் வேலை பார்ப்பது பிடிக்குமானால்,  நேரத்தை எப்படி பயனுள்ளதாய்  செலவழிப்பது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். விருப்பம் இல்லாத ஊழியர்கள் நேரத்தை வீணாக்கிவிடுவார்கள்.
திறந்த அலுவலக இடத்தை அமைத்திடுங்கள், அப்போதுதான் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதை தெரியவரும், இது அவர்களின் ஆற்றலை அதிகபடுத்த உதவும்.
உங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள், உங்கள் ஊழியர்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதியுங்கள்.
நிறுவன கட்டமைப்புகளை உருவாக்குங்கள். யார் யாரிடம் அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் என்பதை வரையருங்கள்.
ஆடம்பரமான பொருட்களை வாங்காதீர்கள்.
உங்கள் வாடிக்கையாளர்களை தொடர்புகொள்வதற்கு பொது தொடர்பு நிறுவனத்தை (PR Firm) பயன்படுத்தாதீர்கள். உங்கள் நிறுவனத்தின் மூலம் நீங்களே அவர்களை தொடர்புகொள்ளுங்கள்.
உங்கள் ஊழியர்களின் வேலையில் வேடிக்கை,  பொழுதுபோக்கு போன்றவற்றை புகுத்துங்கள்.

#  Kemmons Wilson
தினமும் அரை நாள் கடுமையாக உழையுங்கள். ஒரு நாளுக்கு இருபத்துநான்கு மணி நேரம் இருக்கிறது. இதில் பன்னிரண்டு மணி நேரம் .. அதாவது அரை நாள் நாம் முன்னேறுவதற்காக முழு மூச்சுடன் பயன்படுத்தினால் வெற்றி வசப்படும்.
உழைப்புதான் எல்லா வாய்ப்புகளையும் திறக்கும் சாவி.

உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பது மகிழ்ச்சி உருவாக்காது. உங்களிடம் இருப்பதை எவ்வளவு கொண்டாடுகிறீர்கள் என்பதில்தான் மகிழ்ச்சி உருவாகும்.
ஒரு மனிதனின் வெற்றி அல்லது தோல்விக்கு அவரின் அறிவுத்திறனை விட மனப்பாங்கே முக்கிய பங்காற்றுகிறது.
வெற்றியடைய துணிச்சலாய் காரியங்களை செய்ய வேண்டும்.
சம்பாதிப்பதை விட அதிகமாக உழைக்கவில்லையென்றால், உழைக்கும் அளவை விட அதிகமாக சம்பாதிக்க இயலாது.
எதையும் நாளை என்று தள்ளிப் போடக்கூடாது.
கவலைப்படாதீர்கள், கடந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. எதிர்காலத்தை பற்றி கவலைபட்டால் உங்கள் நிகழ்காலம் அழிந்துவிடும். கவலையில் எந்த நன்மையையும் கிடையாது.
வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.
வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள பயப்படாதீர்கள்.

# ஆர். ஜி. சந்திரமோகன்
‘‘பிஸினஸில் இருப்பவர்கள் எடுத்த எடுப்பிலேயே பாதுகாப்பு என்ற பெயரில் வீடு, மனை என்று பணத்தை முடக்கக்கூடாது.அந்த பணத்தை தொழில் செய்தால் நாலு பேர்க்கு வேலையும் கொடுக்கலாம் நாமும் முன்னேறலாம் தன் கடைசிக் காலம் வரையில் ஜே.ஆர்.டி. டாடா மும்பையில் ஒரு வாடகை வீட்டில்தான் குடியிருந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! –

#  சாம் வால்டன் (Sam Walton)
தீர்க்கமுடியாத பிரச்சனை என்று எதுவுமே கிடையாது.மேல்பார்வைக்குத் தீவிரமாகத் தோன்றுகிற சாவால்களைக்கூட தைரியமாக ஏற்றுப் போராடுங்கள். ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அனுபவம் – இரண்டுமே விலைமதிக்க முடியாத சொத்துக்கள்!
வெற்றி என்பது எல்லோருக்கும் சொந்தமானது. சரியான வாய்ப்பும் ஊக்கமும் தரப்பட்டால், சாதாரண மனிதர்களால் கூட, பல பெரிய வெற்றிகளை பெறமுடியும்.
ஒரு நல்ல யோசனையை, உடனே செயல்படுத்துங்கள். ஆனாலும் அதைச் யோசித்து செயல்பட மறவாதீர்கள்.
நாம் நம்முடைய பழைய சாதனைகளில் திருப்தியடைந்து மகிழ்ந்துவிட்டால், நாம் அங்கேயே தேங்கி நின்று விடுவோம். அதை மறந்துவிட்டு, அடுத்து என்ன என்கிற ஆர்வத்துடன் வாழ்க்கையை அணுகினால், மேலே மேலே சென்று கொண்டே இருக்கலாம்.
தனிப்பட்டமுறையிலும், தொழிலிலும் சிக்கனம் என்பது மிகப் முக்கியமான விஷயம். நாம் சேமிக்கிற ஒவ்வொரு துளியும், தவிர்க்கிற ஒவ்வொரு அநாவசிய செலவும் நமது லாபத்தை அதிகரிக்கும்.
பணமும், வெற்றியும் நமக்கு கிடைக்கும்போது, அதோடு சேர்ந்து வரும் விஷயம் பொறாமை. நம்மைப்போல் வெற்றியடையமுடியாதவர்கள், அந்த இயலாமையை காட்ட நம்மைப்பற்றி பலவிதமாக பேசுவார்கள். நமது முன்னேற்றத்திற்கு தடைப்போட முயல்வார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், நமது வெற்றிப் பயணத்தை தொடரவேண்டும்.
வணிகத்துறையில் பெரியதாக ஜெயிக்கவேண்டுமென்றால், நாம் நம்முடைய லாபத்துக்காக மட்டும் உழைக்கக்கூடாது. நமது வாடிக்கையாளர்களுடைய லாபத்துக்காகவும் உழைக்கவேண்டும்.

#  டோனால்ட் டிரம்ப் (Donald Trump)
நீங்கள் பணத்திற்காக மட்டும் உங்கள் வேலையை செய்ய வேண்டாம்.
உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,ஒரு போதும் உங்கள் தவறுகள் உங்களை கீழே செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 குறிக்கோளை உயர்வாக  வையுங்கள்.
 ஒரு போதும் நீங்கள் செய்யும் காரியத்திலிருந்து பின்வாங்காதீர்கள்.
 நீங்கள் செய்யும் விசயங்களில் அதிக தகவல்களை கொண்டிருங்கள்.
உங்களுக்கு விருப்பமான காரியத்தில் அதிகமான சிக்கல்கள் இருந்தாலும் அந்த காரியலேயே கவனத்தை செலுத்துங்கள். 
 திறமையான ஊழியர்கள், குழுக்களை கொண்டிருங்கள்.


Thanks: http://tamilentrepreneur.com

முன்னேற

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7. முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13. ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18.மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள்.

20.மற்றவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

Thanks: http://tamilentrepreneur.com

Monday, 9 October 2017

பேச்சைக் குறை

பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டும்.
சுருக்கமாக பேச வேண்டும்.
பேசியதையே திரும்ப திரும்ப பேசக்கூடாது. இதனால் உடலின் சக்தி  வீணாகாமல் பார்த்து கொள்ளலாம்.

பிறரை பற்றி ஏளனமாக பேசுதல்,
கோள் சொல்லுதல்,
எதற்கெடுத்தாலும் குறை சொல்லுதல்,
இடக்கு, மடக்காக பேசுதல் போன்றவற்றால் மனம் தன்னைக் கெடுத்துக் கொள்கிறது.

இனி கடுமையான வார்த்தைகளால் யாரையும் பேசுவதில்லை என தீர்க்கமாக, திடமாக, உறுதியாக முடிவெடு முன்னேறு தோழா!

ஹிட்லர் சொன்னது


முதலாவது உலகப் போரின்போது சிப்பாயாக கூட கலந்து கொள்ள‍ தகுதி யில்லை என புறக்கணிக்கப்பட்ட‍ ஒருவன் இரண்டாவது உலக போரில் தலைமையேற்று உலகநாடுகள் அனைத்தையுமே நடுங்கவைத்த‍வன் யாரென்றால் அவன் தான் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக அப்போது இருந்த ஹிட்லர்…  எதிரி நாடுகளையே கதிகலங்கச் செய்யும் பலவிதமான அதிரடியாக போர் வியூகங் களையும், போர்உத்திகளையும் கையாண்டவர் என்பது உங்களுக்குதெரியும். அந்நேரத்தில் வாழ் வில் வெற்றி  உன் வசம் ஆவதற்கு அந்த ஹிட்லர்  அதாவது வெற்றிக்கு வித்திடும் அதிரடியான பத்து குறிப்புக்களை நமக்கு சொல்லியுள்ளார். இதோ அந்த அதிரடி ஆலோசனைகள்

ஹிட்லரின் அதிரடி ஆலோசனைகள்:
1) மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்து விடலாம்.
2) தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
3) ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.
4) அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
5) இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால் விடாதே!
6) நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசை கொள்ளாதே!
7) பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக்கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
8) உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தேர்வு செய்தாள்.
9) நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
10) நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.

Friday, 6 October 2017

என்னடா வாழ்க்கை


விநோதமான
விசித்திர உலகம் இது

தவறுகளையே  சரி என்னும்
தறுதலை உலகம் இது

ஒரு
பள்ளிக்கூடம் கடக்கிறேன்

குழந்தைகளை
முட்டி போட வைத்து விட்டு
சுதந்திரம் பற்றி
ஒருமணி நேரம்
நீதி போதனை செய்கிறார்
ஓர் ஆசிரியர்

வகுப்புக்கு வெளியே
வானம் பார்த்தவர்களை
பிரம்புகளால் கை குலுக்கி விட்டு
கரும்பலகையில்
ஆகாயம் வரைகிறார்
ஒரு ஆசிரியை

பட்டாம்பூச்சிகளாக
பறந்து திரிய வேண்டிய
பாலகப் பூக்களைச்
சங்கிலியால் கட்டி விட்டு
நந்தவனங்களின்
சௌந்தர்யம் பேசுகிறார்
ஒரு போதகப் பிதா

அஞ்சு பைசாவுக்குப் பயனி்ல்லாத
அல்ஜீப்ரா...

வெக்டார் கால்குலேஷன்

டிஃபரன்ஷியேஷன்
கால்குலஸ்

அவன் வாழ்வதற்கான
ரூட்டை சொல்லித்தராமல்,
ரூட் த்ரி வேல்யூ
சொல்லித்தந்து பலனில்லை...

ப்ராபபல்டி போதித்து விட்டு
வீட்டின்
பால்கணக்கிற்கு
கால்குலேட்டர் தேடச் சொல்கிறார்
ஒரு ராமானுஜர்...

கொள்ளையடிக்க வந்த
கஜினி முகமதை
கோரி முகமதை
கில்ஜி வம்சத்தை
தைமூர் பரம்பரையை
மொகல் மூஞ்சூறை
ஆங்கிலேய ரௌடிகளை
மனப்பாடம் செய்யச் சொல்லி
குழந்தை மூளையை
கெட
வைக்கிறார்
ஒரு
வரலாற்று வாஸ்கோடகாமா...

சும்மா கிடந்த
தவளையை கொலைசெய்ய வைத்து
குழந்தையை
கொலைகாரன் ஆக்குகிறார்
ஒரு
விலங்கியல் வேதாந்திரி

செத்துப் போன
லத்தீன் பெயர்களை
எங்கள் ஊர்ப் பூக்களுக்குச் சொல்லி
செடிகளைத்
தற்கொலை செய்ய வைக்கிறார்
ஒரு
தாவரவியல் சாக்ரடீஸ்...

நிறுத்துங்கள்
எங்கள்
ஆசிரிய தெய்வங்களே

இந்த
இதயமற்ற அரசிடம்
இனியாவது பேசுங்கள்

பிள்ளைகளின்
அறிவுத் திரியில்
தீபமேற்ற ஏதாயினும்
திட்டம் செய்யுங்கள்

அவனவனுக்கு எது வரும்
அதைக்
கற்றுக் கொடுங்கள்...

இவன் உயர் உயர்ந்த
ஜாதிகாரன் இவன் தாழ்ந்த ஜாதிகாரன் என்கின்ற மாயையை கிள்ளி எறிய
கற்று காெடுங்கள்...

அனைவரும்
சமம் என்பதை பாேதியுங்கள்...

வள்ளுவன் கையில்
ஜாவா திணிக்காதீர்கள்...

பில்கேட்ஸ் கையில்
தொல்காப்பியன் செருகாதீர்கள்...

பிள்ளைகள்
மிருதுவானவர்கள்
அவர்களை
மனப்பாடம் செய்யும்
ஏடிஎம் ஆக்காதீர்கள்...

யாரையும்
யாரோடும் ஒப்பிடாதீர்கள்...

முதல் மதிப்பெண் பெற்றவனே
மூளைக்காரன் என்ற
இந்த
முகவரி மாற்றுங்கள்...

மூன்றாம் பரிசு பெற்ற
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்னும் வாழ்கிறது...

முந்திய இரண்டைக்
காணவில்லை...

மூன்றுமணி நேரம்
தின்றதை வாந்தியெடுக்க
அவர்களுக்கு
#இனிமா தராதீர்கள்...

புரியும்படி
சொல்லிக் கொடுங்கள்...

புரியும்வரை
சொல்லிக் கொடுங்கள்...

வீட்டுப்பாடம் என்ற பெயரில்
அவர்களைக்
காட்டுக் குரங்குகளாக மாற்றாதீர்கள்...

ஒன்று கவனித்தீர்களா

காலையில் பள்ளிக்கூடம்
கவலையோடு வரும் அதே குழந்தை தான்
மாலையில் எத்தனை மகிழ்வோடு
ஓடுகிறது பாருங்கள்...

எங்கே பிழை...

எது சரியில்லை
கண்டுபிடியுங்கள்...

உங்களுக்கும்
ஆயிரம் பிரச்சினை...

மறுக்கவில்லை
மகான்களே...

இன்னும்
கரிசனையோடு அணுகுங்கள்
கனவான்களே...

பள்ளிக்கூடத்தால்
துரத்தி விடப்பட்டவன் தான்
எடிசன்...

ஆக
பாடப் புத்தகம் மட்டுமே
வாழ்க்கையில்லை...

சாக்ரடீஸ் என்பவன்
படித்தவனில்லை...

ஆனால்
புத்தகங்களுக்கே
ஆனா ஆவன்னா
சொல்லிக் கொடுத்தவன்...

ஐன்ஸ்டீன்
தன்
மரணப் படுக்கையிலும்
சூத்திரங்கள் எழுதியவன்...

பீத்தோவன்
செவிடன்...
ஆனாலும்
செவிக்கினிய
புதிய புதிய
இசைக்குறிப்பு செய்தவன்...

கண் தொலைந்த பிறகும்
அணுவை ஆய்ந்தவள்
மேரி கியூரி...

உங்கள்
பாடப் புத்தகத்தை
பாராயாணம் செய்தவர்களை விட
உலகம் உணர்ந்தவன்
வென்றிருக்கிறான்...

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவியவன்
படித்தவனில்லை...

அவனிடம்
எம்பிஏக்கள்
க்யூவில் நிற்கிறார்கள்...

வாடகை வீட்டுக் கூரையில்
மெஸ் நடத்தியவன்
சரவண பவன்...

அவன் கிளை இல்லாத
தேசம் இல்லை....

கம்பன்
இளங்கோ
பாரதி
கண்ணதாசன்
எங்கே படித்தனர்...

அவர்கள் படைத்தவைகள்
பல்கலைக்கழகங்களுக்கே
பாடங்களாய்...

இந்த மண்
அறிவாளிகளின் மண்

இந்த மண்
ஞான மாணாக்கர்களின் மண்

அவனவன்
நதி மாதிரி

அவனவனை
அவன் போக்கில் விடுங்கள்

அப்போது தான்
இந்த
நிலம் செழிக்கும்
இந்த
வனம் செழிக்கும்

அவனவனின்
சுய சிந்தனை வளருங்கள்

இந்தத்
தேசத்தைக்
காதலிக்கச் சொல்லிக் கொடுங்கள்

இந்த
மக்களை
அன்பு செய்யச் சொல்லிக் கொடுங்கள்

சாதி மதம் என்கின்ற
பிரிவினை இல்லாத,
ஏழை பணக்காரன்
என்கின்ற பிரிவினை
இல்லாத,
#வேறுபாடு இல்லாத
நேசத்தை  உருவாக்கிக் கொடுங்கள்...

தாயை விட உயர்ந்தது தாய்நாடு என்கின்ற   தேசப்பற்றை கற்றக்
காெடுங்கள்.

தேசத்திற்காக
உழை த்து உயிரை விட்ட வீரபாண்டியகட்டபாெம்மன்,வஉசிதம்பரனார்,
அம்பேத்கர் நேதாஜி சுபாஷ் சந்திரபாே ஷ்,
பகத்சிங்,திருப்பூர்குமரன்,ஜான்சிராணி ஆகியாே ரை பற்றிய பாடங்களை சாெ ல்லி காெடுங்கள்.

பகத்சிங் உணர்வுகள்
பாரெங்கும் பரவிவளரட்டும்.

எல்லோர்க்கும் எல்லாம்
என்கின்ற சூழல்  வளர
முயற்சியுங்கள்.

இதை உங்கள் கல்வியில்
உயிரெழுத்தாய்க் கொடுங்கள்

சமூகத்தை நேசிக்கக்
கற்றுக் கொடுங்கள்

பண்பாடு கலாச்சாரம்
பந்தி வையுங்கள்

பெண்களை
மரியாதையோடு பார்க்க
இளைய கண்களுக்கு
எழுதிக் கொடுங்கள்...

ஒவ்வொரு பெண்ணும் தாய் என்று
உணர வையுங்கள்...

ஈவதை
எங்கள் பிள்ளைகளுக்குச்
சொல்லிக் கொடுங்கள்
பரம பிதாக்களே...

அதை விடுத்து
உங்கள் பிள்ளை சரியில்லை என
மாதக் கூட்டத்தில்
ஒப்பாரிப் பத்திரம்
வாசிக்காதீர்கள்...

எங்களை விட அதிக நேரம்
உங்களிடமே இருக்கிறார்
எங்கள் பிள்ளைகள்

எங்கள் குழந்தைகள்
பச்சை மூங்கில்
அதை
புல்லாங்குழலாக்குங்கள்

எங்கள் மழலைகள்
வெறும் நதிதான்
அதை
கடல் சேருங்கள்

நான் ஒரு பாமரன்.

நான் சொன்ன
எல்லாவற்றையும்
கணக்கில் எடுக்காதீர்கள்

எது தேவையோ
அதை மட்டும் எடுங்கள்
இந்தச் சமூகம்
பயன்படும்படி
பலம்படும்படி
வளம்படும்படி
நலம்படும்படி......

அதோ!
இந்தப் பாமரன்
போய்க்கொண்டே இருக்கிறேன்
இந்தச் சமூகத்தைச்
சலவை செய்யும்படி...

#படித்ததில்_கனத்தது