Sunday, 30 April 2017

ஏழையின் சிரிப்பில் மட்டுமே இறைவன்!



இறைக்கருணை இந்த சகோதரியின் தேவைகளை பூர்த்தி செய்யட்டும்..



Saturday, 29 April 2017

Whatsup - படித்ததில் பிடித்தது - 006

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் பெற்று நீயூஸ் பேப்பர்ல படம் வந்தவங்களை மறுபடி நீங்க என்னைக்காவது எங்காவது பார்த்து இருக்கிங்களா??

கண்டிப்பா பார்த்து இருக்க முடியாது...

இந்த பர்ஸ்ட் பெஞ்ச் கேஸ் எல்லாம் உருட்டி பெரட்டி ஒரு மெடிக்கல், இஞ்சினியரிங் முடித்து ஒரே ஒரு கார் , ஒரே ஒரு வீடு, ஒரே ஒரு பொண்டாட்டி, ஒன்றிரண்டு குழந்தைகள்னு செட்டில் ஆகிடுவாங்க.

வாழ்க்கையில் சாதித்தவங்க வரிசையில் நிற்பவங்க எல்லாம் ரொம்ப நடுத்தரமும் லாஸ்ட் பெஞ்சும்...

அடி வாங்கி அடி வாங்கி, அசால்ட்டா எழுந்து நிப்பதும், வெற்றி பெறுவதும் நம்ம மிடில் கடைசி பெஞ்சும், மிடில் கிலாசும்தான் ....

100க்கு 99 வாங்குனா அழும் முதல் பெஞ்ச் மாணவன் ... சின்ன அடி வாங்கினதும் மூலைல முடங்கிக்குவான்..

ஐந்துலயும் அரியர்ஸ்டா.. லாஸ்ட் பெஞ்ச்டா.. எருமை மேய்க்கத்தான் லாய்க்கு என்ற பெயர் பெற்றவர்கள்தான் சொந்த தொழில் ஆரம்பித்து ஐம்பது, நூறு, ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் வெற்றியாளராக சாதனையாளராக இருப்பர்.

அப்துல்கலாம்..
காமராஜர்,
எம்.ஜி.ஆர்,
டெண்டுல்கர்,
வைரமுத்து,
பில் கேட்ஸ்
இளையராஜா தொடங்கி ஒலிம்பிக்ல தங்கம் வாங்கின நம்மூர் மாரியப்பன் வரை ஏழ்மை, கஷ்டம், சாதாரண பள்ளி, சாதாரண வளர்ப்புகளில் வந்தவர்கள்தான் அதிக பட்ச சாதனைகள் படைத்திருக்கிறார்கள்.

சில்வர் ஸ்பூன் கேசுங்க எல்லாம் பெரும்பாலும் அப்பா சேர்த்து வைத்ததை கரைத்து கொண்டோ அல்லது பாதுகாத்து கொண்டோ இருப்பார்கள்..

அதுனால நான் சொல்ல வரது என்னனா, பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். இது மிக கட்டாயம். அத்தியாவசியம்.

ஆனால் உங்க வரவுக்கு மிஞ்சின ஸ்கூல்ல படிச்சாதான் பசங்க முன்னுக்கு வருவாங்க என்று நினைப்பதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை.

நல்ல பள்ளிகள் பிள்ளைகள் திறமையை ஊக்குவிக்கின்றன என்பது கொஞ்சம் உண்மையே..
ஆனால் ஒரு திறமையுள்ள குழ்ந்தை எந்த பள்ளியில் விட்டாலும் நல்லா படிக்கும் என்பது நிறைய நிறைய உண்மை...

அதனால் தன் சக்திக்கு மிஞ்சி, கடன் பட்டு பெரிய பெரிய பள்ளிகளில் சேர்ப்பதை விட, உங்கள் சக்திக்கு எந்த பள்ளியில் சேர்க்க முடியுமோ அதில் சேருங்கள்.

பக்கத்து வீட்டு குழந்தை அங்கதான் படிக்குது, எதிர்த்த வீட்டு குழ்ந்தை இங்க படிக்குது.. அண்ணா பையன் தங்கச்சி பொண்ணு இங்க படிக்குறானு சேர்க்காமல், அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ கடன் படாமல் படிக்க வையுங்கள்.

குழந்தைகளுக்குள் இருக்கும் திறமையை ஊக்குவிக்கத்தான் படிப்பு. ஆனால் அப்படிப்பட்ட கல்வி திட்டம் நம்மிடம் இல்லை ...

எழுத்தை விழுங்கி, வெள்ளைத்தாளில் வாந்தி எடுக்க சொல்லித்தரும் வேலையைத்தான் எல்லா பள்ளியும் செய்யுது..
அதை எந்த பள்ளி செய்தால் என்ன???

சுஜாதா

எழுத்தாளர் சுஜாதாவின் கடைசி கால வரிகள்:

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது ஏரோப்ளேன் ஓட்டவும் கித்தார் வாசித்து உலகை வெல்லவும் நிலவை விலைபேசவும் ஆசைப்பட்டேன்.

நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமையாக்கப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாய் பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகின்றேன், வாழ்க்கை இவ்வகையில் ப்ரொக்ரஸீவ் காம்ப்ரமைஸ் ( படிப்படியான சமரசங்களால் ஆனது ) இன்றைய தினத்தில் என் டாப் டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால் ,, முதலிடத்தில் உடல்நலம் , மனநலம் , மற்றவருக்கு தொந்தரவு தராமல் இருப்பது , இன்சொல் அனுதாபம், நல்ல காபி , நகைச்சுவை உணர்வு , நான்கு பக்கமாவது படிப்பது எழுதுவது..இந்தப் பட்டியலில் பணம் இல்லை,


கற்றதும் பெற்றதும் - சுஜாதா...

உன்னையறிந்தால்


தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.

அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.

கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.

அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

 அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.

 நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான்.

அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.

அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே!

உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.

கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!

தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.

ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!

உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!

தன் நம்பி கை

 200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி” யாருக்கு இது' பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்.
அனைவரும் கையைத் தூக்கினர்.



அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரம்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள் 

கண்ணதாசன்

கண்ணதாசன் ஒரு சித்தர்
.
சமீபத்தில் நான் சந்தித்த ஒரு துறவி ,
என்னிடம் இப்படி சொன்னார்...!
.

ஏற்கனவே பல ஞானிகள் என்னிடம் இதை சொல்லி இருக்கிறார்கள்..!
எனவே நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..!
.

ஆனால்...இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...
என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!
.
“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..”
.
எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!

ஆனால் இன்று ஏனோ....
இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே ,
மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...
அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!
.

“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”
.

 பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!
.
இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?
.
நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்...
.
“ அது வந்து....
அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில்
அதுவும் ஒன்று....
அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”
.# சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்..
கண்ணதாசன்...!
.
சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..!


அவர் ஒரு வரி எழுதினால் ..
அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!
.
கூகிளில் , அங்கும் இங்கும் தேடி ஓடி...
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....
அது இதுதான்...!
.


அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்...
.
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும்
தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...
.
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் ....
.
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..
அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..
சற்றுத் தள்ளி ஒரு கிணறு...
கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
.
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...
காரணம்...?
அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்...
.
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!
.
தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....
.
நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...
உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...
.
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் :

“ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி ,
இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”
.
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...
அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!
.
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....
.
கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
.
வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
.
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!
.
கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :
"நாங்கள் சாட்சி.."
.
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!
.
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்...
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...!
.
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
.
இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்...
வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!
.
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?
.
ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!
.
# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!
.


கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]
.. கதையைப் படித்து முடித்த நான் ,
கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!
.
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”
.
....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் ,
இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..!
இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் ,
கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!
.
சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் ....
அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?
.
அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?
.
# அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் ,
எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?
.
“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”
.
கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞன் மட்டும் அல்ல...
பூஜிக்க வேண்டிய கவிஞன்..!                     

கயமை



மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.

நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

சக்தி பாரதி



நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள்இறைவா! இறைவா! இறைவா!          
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்

அச்ச மில்லை, அமுங்குத லில்லை,
நடுங்குத லில்லை, நாணுத லில்லை,
பாவ மில்லை, பதுங்குத லில்லை;
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்;
கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்;
வான முண்டு, மாரி யுண்டு,
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே;

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா !
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே -- அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே -- இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ

இனியொரு விதி செய்வோம் -- அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் -- வாழ்க

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனைசெய்வோம் -- வீணில்
உண்டுகளித் திருப்போரை
நிந்தனைசெய்வோம்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்;

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'



நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி

உப்பென்றும் தீனி என்றும் உள்நாட்டு சேலை என்றும்
உப்பென்றும் தீனி என்றும் உள்நாட்டு சேலை என்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி

அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும்
அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடி கிளியே
உச்சத்தில் கொண்டாரடி கிளியே ஊமை ஜனங்கலடி கிளியே
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்காரடி கிளியே
சிந்தை இறங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி கிளியே
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி


பாதகம் செய்வோரை கண்டால்
பயம் கொள்ளலாகாது பாப்பா,..
மோதி மிதித்துவிடு பாப்பா,..
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் (பகை)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? - நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? - நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? - நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ? (பகை)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் - நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? - நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ?(பகை)

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)



பழமொழித் தேநீர்

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
செய்வன திருந்தச் செய்.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
பதறாத காரியம் சிதறாது.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

Friday, 28 April 2017

அட்சய திருதியை - தானமே பிரதானம்


தானம் செய்ய வேண்டிய புண்ணிய தினம். தர்மம் செய்ய வேண்டிய நாளில் தங்கம் வாங்குவது பாவம். அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும்

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது நகைக் கடைக்காரர்கள் விதைத்த பொய்யான நம்பிக்கையே ஆகும். அப்படி தங்கம் வாங்க வேண்டும் என்ற தாகம் இருந்தால் அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி, தங்கம் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இப்படி செய்வதால், கடன் வாங்கும் வழக்கம் மேன்மேலும் அதிகரிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.

அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவு படைக்கிறோம். ஆனால் இந்நாளில் இறைவா உண்டு மகிழ்வாயாக என வேண்டினால் இறைவனே உணவை ஏற்று நம்மை ஆசீர்வதிப்பார் என்பது ஐதீகம்.

பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் என்பது பெரியோர் வாக்கு. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள், தர்மங்கள், பலமடங்கு அதிகமாக உதவி செய்தவனுக்கே ஏதாவது ஒரு வகையில் திரும்ப கிடைக்கும்.

இந்த நாளில், தீராத வியாதி உள்ளவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து இறைவனின் நாமத்தை ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

அட்சய திரிதியை என்னும் நாளில் தங்கம் வாங்கினால் அதன் பின் வரக்கூடிய நாட்களில் செல்வம் கொழிக்கும் என்று கூறி மூட நம்பிக்கையின் பின்னால் சுற்றும் கூட்டம் இப்பொழுதே டோக்கன் வாங்க நகை கடைகளில் அலை மோதுவது கொடுமை. பக்தியின் பெயரால் நடக்கும் மோசடி நாடகம்..

மனைவிக்கு தங்கம் வாங்கிக் கொடுப்பவன் மனிதன்!
மனைவியையே தங்கமாக நினைப்பவன் மாமனிதன்!!😊

ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படி ஒரு நாள் இருந்ததாக நினைவில் இல்லை.

அறிவுரை


 1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3🕹. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4🕹. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5🕹. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6🕹. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7🕹. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

8🕹. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு  நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள்.  பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை  சொல்லிக் கொடுங்கள்.

9🕹. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.

10🕹. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11🕹. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12🕹. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13🕹. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.

14🕹. கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15🕹. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16🕹. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.  அதை செயல்படுத்தவும்  முயற்சி செய்யுங்கள்.

17🕹. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18🕹. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.  முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19🕹. குறுகிய கால இந்த வாழ்க்கையில்  யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20🕹. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21🕹. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22🕹. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23🕹. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள்.  உங்கள் மனபாரம் நீங்கும்.

24🕹. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25🕹. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.

26🕹. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27🕹. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28🕹. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29🕹. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
   
30🕹. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!

விவேக மொழிகள்

சுவாமி விவேகானந்தர் என்ற பெயரை ஒரு துறவியாக மாறிய பின்பு அவரே வைத்துக் கொண்டார். உண்மையிலேயே அவருக்கு விரேஷ்வரா என்ற பெயரை அவர் தாய் வைத்தார். பின் அவருக்கு நரேந்திர நாத் தத்தா என்ற பெயரை வைத்தனர்.

“உலக மாந்தர் அனைவரும் முக்தி அடைய உதவுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நான் பூமியில் பிறக்கத் தயார்” என்று அறிவித்த அவரது அமிர்த வாக்கியம் மனிதர்களின் உள்ளங்களை எல்லாம் பூரிக்க வைக்கும் கருணை வெள்ளத்தின் அடையாளம் அல்லவா!



1. ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது எதை சிந்திக்கிறானோ அதுவே அவன் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

2. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் நாத்திகன் அல்ல; தன் மீதே நம்பிக்கை இல்லாதவன் தான் நாத்திகன்.
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்,
அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்

3. நீ உன்னைப் பற்றி என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய். உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனன் ஆகிவிடுவாய். வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை ஆகிவிடுவாய். ஆகவே உன்னைப் பற்றி உயர்வாகவே நினை. பாவிகள் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நினைத்து சோர்ந்து போய் இருக்காதே. உன்னால் எதுவும் முடியும் என்பதை மறக்காதே!
பிறரை முதலில் நம்புவதைவிட்டு உன்னை நீ முதலில் நம்பு, அனைத்து ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருப்பதால், அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. "நான் எதையும் சாதிக்கவல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.
நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் விழித்துக்கொள், மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி.

4. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் கண்டு வருந்தாதே! எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் பரந்து விரிந்திருப்பதைப் பார். நம்பிக்கையோடு செயல்படு.

5. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

6. யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.

7. ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான்.

8. குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.

9.  பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.

10. தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
     தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.

11.  கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.

12. எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.

13. கருணை நிறைந்தவர்களாக மாறுங்கள். ஏனெனில், கருணையே இனிய சொர்க்கம்.

14. எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.

15. நீங்கள் எல்லை இல்லாத வலிமை பெற்றவர்கள். உங்களின் உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும் இடமும் கூட ஒரு பொருட்டல்ல.

16. இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். என்னால் இயலாது என்று எதையும் மறுக்காதீர்கள். எதையும் உங்களால் சாதிக்க முடியும்.

17. ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒருமுறை லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.
      பலவீனத்திற்கு பரிகாரம் பலவீனத்தை சிந்திப்பது அல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

18. கீதை படிப்பதை விட, கால்பந்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள். அதனால், உடல் வலிமை மிக்கவராக ஆகுங்கள்.

19.  சாந்தமான மனநிலை கொண்டவன் நல்லபணிகளில் ஈடுபட்டு, நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

20. மனிதர்கள், விலங்குகளை விட ஒழுக்கமானவர்களாக இல்லை. சமூக பொது அபிப்ராயம் தான் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக வைத்திருக்கிறது.

21. ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கும் தெய்வீக சக்தியை வெளிக்கொண்டு வருவது தான் நம் வாழ்வின் லட்சியம்.

22. தன்னை அடக்கியாளப் பழகியவன் ஒருபோதும் புற உலக விஷயங்களுக்கு அடிமையாக மாட்டான். அத்தகையவனே உலகில் வாழத் தகுதி படைத்தவன்ஆகிறான்.

23. ஒருவன் நெருப்பில் கூட தூங்க முடியும். ஆனால், வறுமை நிலையிலோ கணப்பொழுதும் கண்மூடித் தூங்க முடியாது.

24. மனமும், உடலும் ஒருமித்து இருக்கும் போது எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியே கிடைக்கும்.

25. பெரிய விஷயங்களை நிறைவேற்றும்போது இடையூறுகள் குறுக்கிடவே செய்யும். அதனால் ஆண்மையோடு தொடர்ந்து முயற்சியுங்கள்.

26. பசியால் நலிந்து வாடும் ஏழைகளிடம் ஆன்மிகம் பேசுவது அவர்களை அவமதிப்பதாகும்.

27. மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.

28. மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.

29. சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.

30. பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.

31. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

32. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

33. நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

34. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

35. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

36. நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

37 உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

38. பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது

39. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

40, மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.

41. ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.

42. எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.

43. மூளை - தசைகள் - நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.

44. நாம் நினைக்கும் எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.

45. ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.

46. பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

47. துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.

48. கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.




ஷீரடி சாய்பாபாவின் உபதேசங்கள்


ஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் முடிவுக்கு வந்துவிடும். அவன் அதன் பின்னர் பூரண சவுகரியத்தை அடைகிறான்.
பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
இவ்வுலகை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.
என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.
என்னிடம் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைந்தவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாட்சிக்கிறேன்.
நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன். என்னுடைய பக்தர்கள் வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.