Friday, 13 June 2025

நலம் காக்க

நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும்

உண்ணும் உணவில் கவனம் வைத்து, தேவையான அளவே உண்ண வேண்டும்.

உடலுக்குக் தேவையான சத்தாண உணவாக இருப்பது நலம் பயக்கும்.

கவர்ச்சியான உணவில் மீது உள்ள நாட்டம் குறைய வேண்டும்

மாலை நேரங்களில் உண்ணும் நொறுக்குத் தீனி குறைவாக நலம்பயப்பதாக அமைய வேண்டும்.

சாப்பிடுகிறாயா? என்று கேட்பதை எல்லாம் கவைத்துப் பார்க்கத் தேவையில்லை

குறைவாக உண்பவனை அவனுடைய வயிறு வாழ்த்தும்

வாரத்தில் ஓரிரு தடவை உன்னுடைய மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்க வைக்கும் உணவுகளை அளவாக சாப்பிடுவதில் தவறில்லை.

சிறப்பாகப் பணியாற்ற சிந்தித்து நேரிய உணவுகளை உண்டாயாக! 

சத்தாண உணவுகள் கடுமையான வேலைகளை எளிதாகச் செய்ய உதவும்.

உன் உடல் விரும்பும் மற்றும் விரும்பாத உணவுகள் பட்டியல் தெரிந்து வைத்துக் கொள். மீண்டும் மீண்டும் செய்த தவறைச் செய்யாமல் இருக்க உதவும்.

இணை சேராத இரு உணவுகளைச் சேர்த்து உண்ணாதே! எவை எவை அப்படிப்பட்ட உணவுகள் என்பதை அறிக.

எண்ணங்களுக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு.

உடையும் நடையும் தடையற்ற இயக்கமும் உடற்பயிற்சியும் எந்நாளும் தேவை. தயங்காமல் இயங்க உடற்பயிற்சி மிகமிக அவசியம்.

மனம் விரும்பும் உடை அணிய வேண்டும்
நீண்ட நேரம் அணிந்தாலும் உடலை உறுத்தாத உடையாக இருந்தால் நன்று.

ஆள் பாதி ஆடை பாதி என்பது உண்மை
அக அழகுக்கு நல்ல எண்ணங்கள் பற அழகுக்கு வண்ண மயமான ஆடைகள்
இது எப்படி இருக்கு? 



Tuesday, 27 May 2025

நலம் விரும்பு


அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ?
கரும்பு கோணிடில் கட்டியும் பாகும் ஆம்,
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்,
நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம்?  .

     மலர் அரும்பானது கோணினால், அந்த அரும்பானது தனது மணத்தில் குறையுமோ? குறையாது.

     கரும்பு கோணினால், அது சுவை உள்ள வெல்லக் கட்டி ஆகவும், வெல்லப் பாகு ஆகவும் பயன்படும்.

     இரும்பானது வளைந்து அங்குசம் ஆனால், அதைக் கொண்டு அடங்காத யானையையும் அடக்கலாம்.

     ஆனால், உடலில் உள்ள நரம்பானது கோணி, ஒருவனுக்கு மரணம் சம்பவிக்குமானால், அந்த உடல் ஒன்றுக்கும் உதவாது. உடம்பு அவ்வாறு ஆனதை எந்த உபாயத்தால் சீர் செய்வோம்.

Sunday, 11 May 2025

எல்லோரையும் பகைத்துக் கொள்ளாதே

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.



தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.



தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.



தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.

Sunday, 27 April 2025

மனமே நீ மாறிவிடு தொடர்

மனமே நீ மாறிவிடு

பாரதி வனத்தினிலே

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!”
-

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்

பொறிகளின் மீது தனி அரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவை அருளாய்

குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்

குலவிடும் தனிப் பரம் பொருளே!
-
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்

சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்

கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்

கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்

தொல்லைதரும் அகப் பேயைத் தொலைக்க வேண்டும்

துணையென்று நின்னருளைத் தொடரச்செய்தே

நல்வழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்

நமோ நம ஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே!

எது கெடும்

எது கெடும் ?
ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் பாருங்கள்......

(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும்  கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.