Sunday, 14 January 2018
நன்றி நாய்களிடம்
நாயைத் தூக்கி நடுமனையில் வைத்தால்
காரணமின்றி
குளைக்கவே செய்யும்
காரியமின்றி
ஓடவே செய்யும்
கிராமத்துப் பழமொழி
நாய்க்கு வேலையில்லை
உடகார நேரமில்லை
எவ்வளவு பொருத்தம்
செக்கு மாட்டுக் கூட்டத்தைக்
கண்டால்
நாய்க்கு செருக்கு
தலைக்கேறும்
நிறுத்தாமல் குளைத்து
நிம்மதி கொள்ளும்
வாலைச் சுருட்டி
வழி தவறி வரும்
நாய்கண்டால்
சொந்தத் தெரு
பறிபோய் விடுமோ
என்றஞ்சி
இறுதி வரை
குளைத்து விரட்டும்
நாய் கூட
விவரமாக
நன்றியை மற்ற
நாய்களிடம்
காட்டுவதில்லை
மனிதனாய் ஒருவன்
வந்து விட்டால்
அவனிடம் மட்டும்
மகிழ்ந்து குளைந்திடும்
வேட்டுச் சத்தம்
கேட்டு விட்டால்
வீட்டுக்குள் அடங்கிவிடும்
நாய்க்குணம் கொண்டோரும்
கவனிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment