யட்சன் கேள்வியும் தருமர் பதிலும்
யட்சன்: சூரியனை உதிக்கச் செய்வது யார்?
தருமர்: பிரம்மா
சூரியன் எதில் நிலைத்து நிற்கிறான்? - சத்தியத்தில்
ஒருவன் எதனால் சிறப்படைகிறான்? - மன உறுதியால்
சாதுக்களின் தருமம் எது? - தவம்
உழவர்களுக்கு எது முக்கியம்? - மழை
விதைப்பதற்கு எது சிறந்தது? - நல்ல விதை
பூமியைவிட பொறுமை மிக்கவர் யார்? - தாய்
வானினும் உயர்ந்தவர் யார்? - தந்தை
காற்றினும் விரைந்து செல்லக்கூடியது எது? - மனம்
புல்லைவிட அதிகமானது எது? - கவலை
ஒரு மனிதனுக்கு உயிர் போன்றவர் யார்? - மகன்
மனிதனுக்கு தெய்வத்தால் கிடைத்த நன்மை எது? - மனைவி
ஒருவன் விட வேண்டியது எதனை? - தற்பெருமையை
யார் உயிர் அற்றவன்? - வறுமையாளன்
எது தவம்? - மன அடக்கம்
பொறுமை என்பது எது? - இன்ப துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்
உயர்ந்தோர் என்பவர் யார்? - நல்லொழுக்கம் உடையவர்
மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்? - கடன் வாங்காதவர்
தூங்கும் போது கண்களை மூடாமல் இருப்பது எது? - மீன்
யட்சன்: இதயம் இல்லாதது எது?
தர்மர்: கல்
உலகம் எங்கும் செல்பவனுக்கு உற்ற துணை எது? - கல்வி
வேகம் மிக்கது எது? - நதி
நோய் உடையவனின் நண்பன் யார்? - மருத்துவர்
உயிர் விடுபவனுக்கு உற்ற துணை யார்? - அவன் செய்த நல்லறம்
எது அமிழ்தம்? - பால்
வெற்றிக்கு அடிப்படை எது? - விடா முயற்சி
புகழ் வாழ்க்கை எதனால் அடையலாம்? - இல்லாதவர்க்கு ஒன்றைத் தருவதால்
உலகில் தனியாக உலா வருபவன் யார்? - சூரியன்
உலகில் மிகச் சிறந்த தர்மம் எது? - கொல்லாமை
உலகெங்கும் நிறைந்திருப்பது எது? - அஞ்ஞானம்
முக்திக்கு உரிய வழி எது? - பற்றினை முற்றும் விலக்குதல்
யாரிடம் கொண்ட நட்பு மேன்மை உடையது? - சாதுக்களிடம் கொண்ட நட்பு
நாட்டுக்கு உயிர் போன்றவன் யார்? - அரசன்
எது ஞானம்? - மெய்ப்பொருளை (கடவுள்) அறிவதே ஞானம்
ஒருவனுக்கு பகையாவது எது? - கோபம்
முக்திக்கு தடையாக இருப்பது எது? - 'நான்' என்னும் ஆணவம்
பிறப்புக்கு வித்திடுவது எது? - ஆசை
எப்போதும் நிறைவேறாதது எது? - பேராசை
யார் முனிவர்? - ஆசை அற்றவர்
எது நல்வழி? - சான்றோர் செல்லும் வழி
எது வியப்பானது? - நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்ட போதும்..தனக்கு மரணம் இல்லையென்று மனிதன் கருதுகின்றானே அதுதான் வியப்பானது
மீண்டும் பிறவி வராமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? - எப்போதும் நல்லறமே செய்தல் வேண்டும்.
No comments:
Post a Comment