ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்து இருந்தார் முல்லா நஸ்ருதீன்
மேனேஜர் முல்லாவை பார்த்தார்
முல்லாவுக்கு அந்த வேலைக்கான தகுதி எதுவும் இருப்பதாக அவருக்கு தோன்றவில்லை
எழுத படிக்க தெரியுமா என மேனேஜர் முல்லாவிடம் கேட்டார்
முல்லா அதற்கு எனக்கு எழுத தெரியும் ஆனால் படிக்க தெரியாது என்றார்
மேனேஜருக்கு ஆச்சரியம்
இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை அவருக்கு
எழுத தெரிந்த ஆனால் படிக்க தெரியாத ஒருவரை அவர் சந்தித்ததே இல்லை
உடனே மேனேஜர் ஒரு நோட்டைக் கொடுத்து எழுதச்சோன்னார்
உடனே முல்லா அதில் எழுத ஆரம்பித்தார் வெகு வேகமாக
முதல் பக்கம், இரண்டாம் பக்கம்
மூன்றாம் பக்கமும் எழுதிவிட்டார் முல்லா
இதைக்கண்ட மேனேஜர் போதும் நிறுத்து எனக்கூறி
முல்லா எழுதியதை வாங்கி பார்த்தார்
ஒன்றும் புரியவில்லை
எனவே எனக்கு புரியவில்லை
நீயே படித்து சொல் என்றார்
அதற்கு முல்லா சொன்னார்
நான்தான் முதலிலேயே சொன்னேனே
எனக்கு எழுத மட்டுமே தெரியும் படிக்க தெரியாது என 😁😁😁
நீ கடவுளைப்பற்றி ஆயிரம் விசயங்கள் பேசலாம்
எல்லாமே பிறரால், புனித நூல்கள் என கூறப்பட்டவைகளால் உனக்குள் புகுத்தப்பட்டவை
நீ பேசிய அதே விசயங்கள்
உனது கடவுள் அனுபவமா? என்ற கேள்வி வரும்போது
நீ முல்லாவைப்போல ஆகி விடுகிறாய்
*#ஓஷோ*
No comments:
Post a Comment