Monday, 21 August 2017

சிந்தனைத் துளி

அந்த நிலவொளியில், அமைதியின் அரவணைப்பில், இயற்கைக் காற்றைச் சுவாசித்தபடி இயல்பாய் இருந்த நினைவுகள் சுகம். மனம் ஏகாந்தமாய் இருக்கிறது. கடமைகளற்ற சூழலில் நான் என் முழுமையை உணர்கிறேன். பணத்திற்காக, நாளைய சுகத்திற்காக ஓடி ஓடி மனிதன் தன் சுயத்தை இழக்கிறானே என்ன கொடுமை. நிரந்தரமற்ற வாழ்க்கையில் நிம்மதியாக நாளை வாழலாம் என்று இன்றிருக்கும் இயல்பை மறந்து மனிதன் இன்னலுறுவது தான் வேடிக்கை. அடிப்படைத் தேவைக்காக வாழ்ந்த மனிதன் இன்று ஆடம்பரத் தேவைக்காக அனைத்தையும் இழக்கிறான்.

No comments: