Friday, 1 September 2017

உள்ளத்தனையது உயர்வு

ஊக்கம் என்பது முக்கியம். அதை எக்காலமும் விடக் கூடாது. உள்ளம் என்பதை மனம் எனவும் கொள்ளலாம். ஊக்கத்தைப் பொறுத்து வளர்ச்சி உண்டு. தூக்கமில்லாதவனுக்கு ஊக்கமில்லை. ஊக்கமில்லையெனில் வளர்ச்சி இல்லை. எல்லாம் தெரியும் என்பவனுக்கு தன்னைப் பற்றித் தெரியவில்லை. மரம் கூட பழம் கொடுக்கிறது அதனால் வளர்ந்து கொண்டே இருக்கிறது. வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள் தான் மனிதனுக்கு ஒரு வகையில் அம்மை. பிறருக்கு உதவுவதே புண்ணியம். யாரையும் தொந்தரவு செய்யாமல் உதவு. ஆசை இல்லாத போது உண்மையான ஊக்கம் வரும். இறைவன் துதிப்பவனையும் தூற்றுபவனையும் பிரித்துப் பார்ப்பதில்லை. என்னை நிந்திக்கும் போது ஒருவன் சந்தோஷப்படும் போது அதைப் பார்த்துச் சந்தோஷ்படு. காதலைச் சொல்லும் வழி தங்கமென மாறிப் போய்விட்டது உலகம். குறிக்கோள் தெளிவு வேண்டும். பண்பில்லாதவன் கொண்டுள்ள பணம் வீண் தான். சென்று கொண்டே இருப்பது தான் செல்வம். செல்வத்தோடு பயணப்படு. ஊக்கத்தோடு இருப்பவர்களோடு பழகு. அளவாகத் தூங்கு சோம்பல் நீக்கு முயற்சிக்குச் சமமான உறவினன் இல்லை அச்சமே நரகம் சாப்பாடு குறை பிரார்த்தனை செய் உண்மைப் பக்தி செய் தவறு செய்வதற்கு மட்டும் பயப்படு பொறுமை வேண்டும்

No comments: