Saturday, 16 September 2017

இடுக்கண் காண இன்புறு


துன்பமே வா உன்னைச் சந்திக்கிறேன்.
ஓரளவு துன்பம் வந்தால் அழுகை வருகிறது. தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருந்தால், அழுவதற்கு மறந்து போய்ச் சிரிப்பு வருகிறது. ஒரு கால கட்டத்தில் எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது. இப்படி ஒரு மனிதன் பழக்கமடைந்துவிட்டால் அவனது மனம் பக்குவமடைகிறது.
 
கீழே ஏதோ இருக்கிறது என்று நினைத்து எடுக்கக் குனிந்தால் முதுகில் ஏதோ வைத்து விடும் கூட்டம் நம்மைச் சுற்றி இருக்கிறது

பக்குவப்பட ஒரு விவேக சிந்தாமணி பாடல் :

 ஆ ஈன மழை பொழிய, இல்லம் வீழ,
   அகத்தடியாள் மெய் நோவ, அடிமை சாக
   மா ஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட
   வழியில் கடன்காரர் மறித்துக் கொள்ள
   கோ வேந்தர் உழுது உண்ட கடமையை கேட்க
   குருக்கள் தட்சணைக்கு வழியில் நிற்க
   பா வாணர் கவிபாடு பரிசில் கேட்க
   பாவி மகன் படும் துயரம் பார்க்க ஒண்ணாதே.

துன்பக் குதிரையில் ஏறிய ஒருவனைப் பார்த்து சிதறி ஓடும் உறவுக் கூட்டம். இது தான் உலகம்.

மாடு மேஞ்ச புல்லு கூட
மறுபடியும் முளைக்கும்
வஞ்சம் கொண்ட
மனுஷன் நடந்த புல்லு மட்டும்
பட்டவுடன் வெளுக்கும்.

No comments: